×
البقرةவசனம் 25

அல்-முக்தஸர்

وَبَشِّرِ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ أَنَّ لَهُمْ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۖ كُلَّمَا رُزِقُوا۟ مِنْهَا مِن ثَمَرَةٍ رِّزْقًا ۙ قَالُوا۟ هَـٰذَا ٱلَّذِى رُزِقْنَا مِن قَبْلُ ۖ وَأُتُوا۟ بِهِۦ مُتَشَـٰبِهًا ۖ وَلَهُمْ فِيهَآ أَزْوَٰجٌ مُّطَهَّرَةٌ ۖ وَهُمْ فِيهَا خَـٰلِدُونَ ﴿٢٥﴾

முன்னர் கூறப்பட்ட எச்சரிக்கை நிராகரிப்பாளர்களுக்குரியதாகும். தூதரே! அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரியும் நம்பிக்கையாளர்களுக்கு மகிழ்வூட்டும் சொர்க்கச் சோலைகள் உண்டு என்னும் நற்செய்தியைக் கூறுவீராக. அவற்றின் மாளிகைகள் மற்றும் மரங்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றின் தூய்மையான பழங்களிலிருந்து அவர்களுக்கு உணவளிக்கப்படும்போதெல்லாம் அவை உலகிலுள்ள பழங்களை ஓத்திருப்பதைப்பார்த்து, இதற்கு முன்னரும் இதுபோன்றுதானே எங்களுக்கு வழங்கப்பட்டது என்று கூறுவார்கள். அவர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு வடிவத்திலும் பெயரிலும் ஒத்த, சுவையில் வேறுபட்ட பழங்கள் அவர்களுக்கு முன்னால் வைக்கப்படும். மனித மனமும் இயல்பும் வெறுக்கும் இவ்வுலகில் உள்ளோரிடம் காணப்படும் அனைத்துக் குறைகளிலிருந்தும் நீங்கிய தூய்மையான துணைகளும் சொர்க்கத்தில் அவர்களுக்கு உண்டு. முடிந்துவிடும் உலக இன்பத்திற்கு மாற்றமாக என்றும் முடிவடையாத நிரந்தரமான இன்பத்தில் அவர்கள் திளைத்திருப்பார்கள்.