அல்-முக்தஸர்
إِنَّ ٱللَّهَ لَا يَسْتَحْىِۦٓ أَن يَضْرِبَ مَثَلًا مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا ۚ فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ فَيَعْلَمُونَ أَنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّهِمْ ۖ وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوا۟ فَيَقُولُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَـٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهِۦ كَثِيرًا وَيَهْدِى بِهِۦ كَثِيرًا ۚ وَمَا يُضِلُّ بِهِۦٓ إِلَّا ٱلْفَـٰسِقِينَ ﴿٢٦﴾
தான் விரும்பும் உதாரணங்களைக் கூறுவதற்கு அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். அவன் கொசுவையோ அல்லது அதைவிடச் சிறியதையோ, பெரியதையோ உதாரணங்களாகக் கூறுகிறான். இவ்விஷயத்தில் மக்கள் இரண்டு பிரிவினராக உள்ளனர். ஒரு பிரிவினர், அவன்மீது நம்பிக்கை கொண்டவர்கள். மற்றவர்கள், அவனை நிராகரிப்பவர்கள். இந்த இருவரில் அவன்மீது நம்பிக்கை கொண்ட மக்கள் அவன் கூறியதை உண்மைப்படுத்தி, இதற்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கின்றது என்பதை அறிந்துகொள்கிறார்கள். ஆனால், அவனை நிராகரிப்பவர்களோ, கொசு, ஈ, சிலந்தி போன்ற அற்பமான படைப்பினங்களையா உதாரணம் கூறுவது? என்று பரிகாசமாகக் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கான பதிலை அல்லாஹ்வே கூறுகிறான்: இந்த உதாரணங்களில் வழிகாட்டல்களும் அறிவுரைகளும் மக்களுக்குச் சோதனையும் இருக்கின்றன. இவற்றைச் சிந்திக்காத காரணத்தால் அவர்களில் அதிகமானவர்களை அவன் வழிதவறச் செய்கிறான். அவர்களில் இவற்றின் மூலம் படிப்பினை பெற்ற அதிகமானோருக்கு அவன் வழிகாட்டவும் செய்கிறான். வழிகேட்டிற்குத் தகுதியானவர்களைத்தான் வழிகேட்டில் ஆழ்த்துகிறான். நயவஞ்சகர்களைப் போல அவனுக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்களே அவர்கள்.