அல்-முக்தஸர்
ٱلَّذِينَ يَنقُضُونَ عَهْدَ ٱللَّهِ مِنۢ بَعْدِ مِيثَـٰقِهِۦ وَيَقْطَعُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ ۚ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْخَـٰسِرُونَ ﴿٢٧﴾
தன்னை மட்டுமே வணங்குமாறும், முன் சென்ற தூதர்கள் அறிவித்துவிட்டுச் சென்ற தனது தூதரைப் பின்பற்றுமாறும் அல்லாஹ் அவர்களிடம் செய்த உடன்படிக்கையை அவர்கள் முறித்துவிடுகிறார்கள். அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முறிக்கும் இவர்கள் அவன் சேர்ந்து வாழும்படி கட்டளையிட்ட இரத்த சொந்தங்களையும் துண்டித்துவிடுகிறார்கள். பாவங்களின் மூலம் பூமியில் குழப்பம் உண்டாக்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள்தாம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நஷ்டமடைந்தவர்கள்.