அல்-முக்தஸர்
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَنفِقُوا۟ مِمَّا رَزَقْنَـٰكُم مِّن قَبْلِ أَن يَأْتِىَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شَفَـٰعَةٌ ۗ وَٱلْكَـٰفِرُونَ هُمُ ٱلظَّـٰلِمُونَ ﴿٢٥٤﴾
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! மறுமைநாள் வருவதற்கு முன்னரே நாம் உங்களுக்கு வழங்கிய ஹலாலான செல்வங்களிலிருந்து செலவுசெய்யுங்கள். அந்நாளில் மனிதன் தனக்குப் பயனளிக்கக்கூடியவற்றை சம்பாதிக்கக்கூடிய வியாபாரத்தையோ கடினமான சூழ்நிலைகளில் உதவக்கூடிய நட்பையோ தீங்கிலிருந்து காத்து நன்மையைப் பெற்றுத்தரக்கூடிய பரிந்துரையையோ பெறமுடியாது. அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடியவர்கள்தாம் தமது நிராகரிப்பின் காரணமாக உண்மையில் அநியாயக்காரர்களாக உள்ளனர்.