அல்-முக்தஸர்
وَمَآ أَنفَقْتُم مِّن نَّفَقَةٍ أَوْ نَذَرْتُم مِّن نَّذْرٍ فَإِنَّ ٱللَّهَ يَعْلَمُهُۥ ۗ وَمَا لِلظَّـٰلِمِينَ مِنْ أَنصَارٍ ﴿٢٧٠﴾
அல்லாஹ்வின் திருப்தியை நாடி குறைவாகவோ நிறைவாகவோ நீங்கள் செலவுசெய்த செலவீனங்கள் அல்லது உங்கள் மீது கடமையில்லாத ஒரு வணக்கத்தை நீங்களாகவே உங்கள் மீது விதித்து நேர்ச்சை செய்தவைகள் அனைத்தையும் அல்லாஹ் அறிவான். அவற்றில் எதுவும் வீணாகிவிடாது. அவன் உங்களுக்கு மிகச் சிறந்த கூலியை வழங்கிடுவான். தம்மீது கடமையானவற்றை வழங்காத அநியாயக்காரர்களுக்கும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறியவர்களுக்கும் மறுமைநாளில் வேதனையிலிருந்து காக்கக்கூடிய உதவியாளர்கள் இருக்க மாட்டார்கள்.