×
البقرةவசனம் 271

அல்-முக்தஸர்

إِن تُبْدُوا۟ ٱلصَّدَقَـٰتِ فَنِعِمَّا هِىَ ۖ وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا ٱلْفُقَرَآءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ ۚ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّـَٔاتِكُمْ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ ﴿٢٧١﴾

நீங்கள் செய்யும் தர்மங்களை வெளிப்படுத்தினால் அதுவும் நல்லதுதான். நீங்கள் அவற்றை மறைமுகமாக ஏழைகளுக்கு வழங்கினால் அது வெளிப்படையாகச் செய்வதைக் காட்டிலும் சிறந்ததாகும். அதுதான் உளத்தூய்மைக்கு மிகவும் நெருக்கமானது. உளத்தூய்மையுடன் செய்யப்படும் தர்மங்கள் பாவங்களுக்குத் திரையாகவும் மன்னிப்பாகவும் அமைந்துவிடுகின்றன. அவன் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.