×
البقرةவசனம் 272

அல்-முக்தஸர்

لَّيْسَ عَلَيْكَ هُدَىٰهُمْ وَلَـٰكِنَّ ٱللَّهَ يَهْدِى مَن يَشَآءُ ۗ وَمَا تُنفِقُوا۟ مِنْ خَيْرٍ فَلِأَنفُسِكُمْ ۚ وَمَا تُنفِقُونَ إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ ٱللَّهِ ۚ وَمَا تُنفِقُوا۟ مِنْ خَيْرٍ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ ﴿٢٧٢﴾

தூதரே! அவர்களுக்கு நேர்வழிகாட்டி, அதற்கு அவர்களைப் பணிய வைப்பது உம்முடைய கடமையல்ல. சத்தியத்தை எடுத்துரைப்பதே உம்மீதுள்ள கடமையாகும். பாக்கியம் அளித்து நேர்வழிகாட்டுவது அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது. அவன் தான் நாடியவர்களுக்கு நேர்வழிகாட்டுகிறான். நீங்கள் செய்த தர்மங்கள் அனைத்தும் உங்களுக்குத்தான் பயனளிக்கும். அல்லாஹ் அதனை விட்டும் தேவையற்றவன். நீங்கள் செய்யும் செலவுகள் அல்லாஹ்வுக்காக மட்டுமே இருக்கட்டும். அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொண்டவர்கள் அவனது திருப்திக்காகவே செலவுசெய்வார்கள். சிறியதோ பெரியதோ நீங்கள் செய்த தர்மத்திற்கான கூலியை குறைவின்றி நிறைவாகப் பெறுவீர்கள். அல்லாஹ் எவர்மீதும் அநீதி இழைத்துவிட மாட்டான்.