×
البقرةவசனம் 279

அல்-முக்தஸர்

فَإِن لَّمْ تَفْعَلُوا۟ فَأْذَنُوا۟ بِحَرْبٍ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦ ۖ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَٰلِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ ﴿٢٧٩﴾

உங்களுக்குக் கட்டளையிட்டபடி நீங்கள் செய்யவில்லையெனில் அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் போரை எதிர்பாருங்கள். நீங்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி, வட்டியை விட்டுவிட்டால் நீங்கள் அளித்த கடனின் அசல்மூலதனம் உங்களுக்குத்தான். உங்கள் அசல்மூலதனத்திற்கு அதிகமாகப் பெற்று எவர்மீதும் அநீதி இழைத்துவிடாதீர். வழங்கிய கடனைவிட குறைத்து உங்களுக்கு அநீதி இழைக்கப்படவும் மாட்டாது.