அல்-முக்தஸர்
وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَىٰ مَيْسَرَةٍ ۚ وَأَن تَصَدَّقُوا۟ خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ ﴿٢٨٠﴾
உங்களிடம் கடன் வாங்கியவர் கடனை செலுத்த முடியாத அளவுக்கு கஷ்டத்தில் இருந்தால் வசதி ஏற்படும் வரை அவருக்கு அவகாசம் அளியுங்கள். அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் சிறப்பினை நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் அவருடைய கடனை முழுமையாகவோ ஒரு பகுதியையோ தள்ளுபடி செய்து அதை அவருக்குத் தர்மமாக ஆக்கிவிடுவதே உங்களுக்குச் சிறந்ததாகும்.