×
البقرةவசனம் 285

அல்-முக்தஸர்

ءَامَنَ ٱلرَّسُولُ بِمَآ أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِۦ وَٱلْمُؤْمِنُونَ ۚ كُلٌّ ءَامَنَ بِٱللَّهِ وَمَلَـٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِۦ ۚ وَقَالُوا۟ سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ ٱلْمَصِيرُ ﴿٢٨٥﴾

தூதர் முஹம்மது தம் இறைவனிடமிருந்து தமக்கு இறக்கப்பட்ட அனைத்தையும் நம்புகிறார். அவ்வாறே நம்பிக்கையாளர்களும் நம்புகிறார்கள். அனைவரும் அல்லாஹ்வின்மீதும் வானவர்கள் அனைவரின்மீதும் தூதர்களுக்கு இறக்கப்பட்ட அனைத்து வேதங்களின் மீதும் அல்லாஹ் அனுப்பிய தூதர்கள் அனைவரின்மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர்களிடையே நாங்கள் பாகுபாடு காட்ட மாட்டோம். மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: நீ எங்களுக்குக் கட்டளையிட்டதையும், தடுத்ததையும் நாங்கள் செவியேற்றோம். உனது கட்டளைகளைச் செயல்படுத்தி, நீ தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி நாங்கள் உனக்குக் கட்டுப்பட்டோம். அல்லாஹ்வே, எங்களை மன்னித்து விடுவாயாக. நாங்கள் அனைவரும் எங்களின் அனைத்து விவகாரங்களிலும் உன் பக்கமே திரும்ப வேண்டும்.