அல்-முக்தஸர்
لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا ٱكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ إِن نَّسِينَآ أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَآ إِصْرًا كَمَا حَمَلْتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦ ۖ وَٱعْفُ عَنَّا وَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَآ ۚ أَنتَ مَوْلَىٰنَا فَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ ﴿٢٨٦﴾
அல்லாஹ் எவருக்கும் அவர் சுமக்க முடியும் அளவே பொறுப்புகளைச் சாட்டுவான். ஏனெனில் அல்லாஹ்வின் மார்க்கம் இலகுவானது. அதில் எந்தக் கடினமும் இல்லை. எவர் நன்மையான செயலைச் செய்வாரோ அவருக்கு அவர் செய்தவற்றுக்கான கூலி எவ்விதக் குறைவுமின்றி உண்டு. எவர் தீமையைச் சம்பாதிப்பாரோ அவர் சம்பாதித்தவற்றுக்கான தண்டனை அவருக்கே நிடைக்கும். அதனை வேறு எவரும் சுமக்க மாட்டார். தூதரும் நம்பிக்கையாளர்களும் கூறினார்கள்: “எங்கள் இறைவா! எங்கள் சொலல்லிலோ செயலிலோ நாங்கள் மறந்துவிட்டாலோ அறியாமல் தவறிழைத்துவிட்டாலோ எங்களைத் தண்டித்துவிடாதே. எங்கள் இறைவா! அநியாயம் செய்ததனால் நீ தண்டித்த எங்களுக்கு முன் வாழ்ந்த யூதர்கள் போன்றோர் மீது நீ சுமத்தியதுபோன்று எங்கள்மீதும் தாங்க முடியாத சுமைகளைச் சுமத்திவிடாதே. எமக்குச் சிரமமான சுமக்க முடியாத ஏவல்களையும் விலக்கல்களையும் எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் பாவங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாயாக. எங்களை மன்னித்துவிடுவாயாக. எங்கள்மீது கருணை காட்டுவாயாக. நீதான் எங்களின் பொறுப்பாளன், உதவியாளன். உன்னை நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவிபுரிவாயாக.