×
البقرةவசனம் 61

அல்-முக்தஸர்

وَإِذْ قُلْتُمْ يَـٰمُوسَىٰ لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَٰحِدٍ فَٱدْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنۢبِتُ ٱلْأَرْضُ مِنۢ بَقْلِهَا وَقِثَّآئِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا ۖ قَالَ أَتَسْتَبْدِلُونَ ٱلَّذِى هُوَ أَدْنَىٰ بِٱلَّذِى هُوَ خَيْرٌ ۚ ٱهْبِطُوا۟ مِصْرًا فَإِنَّ لَكُم مَّا سَأَلْتُمْ ۗ وَضُرِبَتْ عَلَيْهِمُ ٱلذِّلَّةُ وَٱلْمَسْكَنَةُ وَبَآءُو بِغَضَبٍ مِّنَ ٱللَّهِ ۗ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا۟ يَكْفُرُونَ بِـَٔايَـٰتِ ٱللَّهِ وَيَقْتُلُونَ ٱلنَّبِيِّـۧنَ بِغَيْرِ ٱلْحَقِّ ۗ ذَٰلِكَ بِمَا عَصَوا۟ وَّكَانُوا۟ يَعْتَدُونَ ﴿٦١﴾

மேலும் உங்கள் இறைவனது அருட்கொடைக்கு நன்றிகெட்டமுறையில் நடந்துகொண்ட சந்தர்ப்பத்தையும் நினைத்துப் பாருங்கள், அல்லாஹ் உங்களுக்கு இறக்கிய மன்னு, சல்வா என்னும் உணவுகள் உங்களுக்கு சலித்துப்போய், மாறாத ஒரே வகையான உணவுகளை எங்களால் சகிக்க முடியாது என்று கூறினீர்கள். அல்லாஹ்விடம் பிரார்த்தித்து பூமி விளைவிக்கின்ற கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை வெளியாக்கித் தருமாறு மூஸாவிடம் வேண்டினீர்கள். அதற்கு மூஸா உங்களைக் கண்டித்தவாறு, எவ்வித முயற்சியுமின்றி உங்களுக்குக் கிடைக்கின்ற மன்னு, சல்வா என்னும் சிறந்த உணவுகளுக்குப் பதிலாக அற்பப் பொருளையா வேண்டுகிறீர்கள்? இந்த பூமியிலிருந்து வெளியேறி ஏதாவது ஒரு ஊருக்குச் செல்லுங்கள். அதன் வயல்களிலும், கடைவீதிகளிலும் நீங்கள் கேட்டதைப் பெற்றுக்கொள்வீர்கள். அல்லாஹ் அவர்களுக்குத் தேர்ந்தேடுத்ததை புறக்கணித்துவிட்டு தங்களுடைய மன இச்சைகளை அவர்கள் பின்பற்றியதனால் இழிவும் வறுமையும் அவர்களைச் சூழ்ந்து கொண்டது. அல்லாஹ்வின் மார்க்கத்தைப் புறக்கணித்து அவனுடைய சான்றுகளை நிராகரித்து அவனுடைய தூதர்களை அநியாயமாக கொலை செய்ததனால் அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். இவையனைத்தும் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்து அவன் விதித்த வரம்புகளை மீறியதனால் ஏற்பட்ட விளைவுகளேயாகும்.