×
البقرةவசனம் 62

அல்-முக்தஸர்

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَادُوا۟ وَٱلنَّصَـٰرَىٰ وَٱلصَّـٰبِـِٔينَ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَعَمِلَ صَـٰلِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ﴿٦٢﴾

இந்த சமூகத்தில் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள், அது போன்று முஹம்மது தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னுள்ள சமூகத்தில் நம்பிக்கை கொண்ட யூதர்கள், கிருஸ்தவர்கள், சாபீயீன்கள் (அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொண்ட ஒரு நபியின் சமூகம்) ஆகியோருக்கு அவர்களின் இறைவனிடம் கூலி இருக்கின்றது. மறுமையில் அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. உலகில் இழந்துவிட்ட விஷயங்களுக்காகவும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.