அல்-முக்தஸர்
وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ ﴿٨﴾
தங்களைத் தாங்களே நம்பிக்கையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு கூட்டமும் மக்களில் உள்ளனர். தங்களின் உயிருக்கும் செல்வத்திற்கும் ஆபத்து வருவதைப் பயந்து தங்களை விசுவாசிகள் என்று நாவால் சொல்லிக்கொள்ளும் இவர்கள் உண்மையில் உள்ளத்தால் நிராகரிப்பாளர்கள்.