×
البقرةவசனம் 9

அல்-முக்தஸர்

يُخَـٰدِعُونَ ٱللَّهَ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَمَا يَخْدَعُونَ إِلَّآ أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ ﴿٩﴾

விசுவாசம் கொண்டிருப்பதாக வெளியே காட்டிவிட்டு, நிராகரிப்பை மறைத்து அல்லாஹ்வையும், நம்பிக்கையாளர்களையும் ஏமாற்றிவிடலாம் என்று தமது அறியாமையின் காரணமாக அவர்கள் எண்ணுகிறார்கள். ஆயினும், அவர்களால் இதனை உணர்ந்துகொள்ள முடிவதில்லை. ஏனெனில் அல்லாஹ் இரகசியத்தையும் அதனை விட மறைவானதையும் அறிகிறான். அவர்களின் பண்புகளையும், நிலமைகளையும் அவன் நம்பிக்கையாளர்களுக்கு அறிவித்தும் விட்டான்.