×
البقرةவசனம் 88

அல்-முக்தஸர்

وَقَالُوا۟ قُلُوبُنَا غُلْفٌۢ ۚ بَل لَّعَنَهُمُ ٱللَّهُ بِكُفْرِهِمْ فَقَلِيلًا مَّا يُؤْمِنُونَ ﴿٨٨﴾

எங்களுடைய உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன. அதனால் நீர் கூறும் எந்த விஷயமும் புரியப்போவதில்லை என்ற யூதர்களின் கூற்றே அவர்கள் முஹம்மதைப் பின்பற்றாமல் இருப்பதற்கான சான்றாகக் காணப்பட்டது. ஆனால் உண்மை நிலை அவர்கள் கூறும் காரணமல்ல. மாறாக அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனால் அவன் தன் அருளிலிருந்து அவர்களைத் தூரமாக்கிவிட்டான். எனவே அவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சிலவற்றைத் தவிர வேறு எதனையும் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.