அல்-முக்தஸர்
وَلَمَّا جَآءَهُمْ كِتَـٰبٌ مِّنْ عِندِ ٱللَّهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ وَكَانُوا۟ مِن قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى ٱلَّذِينَ كَفَرُوا۟ فَلَمَّا جَآءَهُم مَّا عَرَفُوا۟ كَفَرُوا۟ بِهِۦ ۚ فَلَعْنَةُ ٱللَّهِ عَلَى ٱلْكَـٰفِرِينَ ﴿٨٩﴾
தவ்ராத்திலும் இன்ஜீலிலும் உள்ள சரியான, அடிப்படையான விஷயங்களை உண்மைப்படுத்தியதாக அல்லாஹ்விடமிருந்து குர்ஆன் அவர்களிடம் வந்தது, அவர்கள் அது இறக்கப்படுவதற்கு முன்னர், ஒரு நபி வரக்கூடிய காலம் நெருங்கிவிட்டது. அவர் வந்தவுடன் அவர்மீது நம்பிக்கைகொண்டு, அவரைப் பின்பற்றி நாங்கள் இணைவைப்பாளர்களை வென்றிடுவோம் என்று கூறிக்கொண்டிருந்தனர். அவர்கள் கூறிக்கொண்டிருந்த முஹம்மது நபியும் குர்ஆனும் அவர்களிடம் வந்தபோது, தாங்கள் எதிர்பார்த்தவர்தான் இவர் என்பதை தெளிவாக அறிந்தபின்னரும் அவரை மறுத்தார்கள். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரிப்பவர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டும்.