×
البقرةவசனம் 91

அல்-முக்தஸர்

وَإِذَا قِيلَ لَهُمْ ءَامِنُوا۟ بِمَآ أَنزَلَ ٱللَّهُ قَالُوا۟ نُؤْمِنُ بِمَآ أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَآءَهُۥ وَهُوَ ٱلْحَقُّ مُصَدِّقًا لِّمَا مَعَهُمْ ۗ قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنۢبِيَآءَ ٱللَّهِ مِن قَبْلُ إِن كُنتُم مُّؤْمِنِينَ ﴿٩١﴾

தன்னுடைய தூதரின்மீது அல்லாஹ் இறக்கிய சத்தியத்தையும் நேர்வழியையும் நம்பிக்கைகொள்ளுங்கள் என்று யூதர்களிடம் கூறப்பட்டால், எங்களுடைய தூதர்களின்மீது இறக்கப்பட்டவற்றைத்தான் நம்பிக்கைகொள்வோம் என்று கூறுகிறார்கள். அவர்களிடமுள்ள தவ்ராத்தை குர்ஆன் உண்மைப்படுத்திய பிறகும் அதனை அவர்கள் நிராகரிக்கிறார்கள். அவர்கள் தம்மீது இறக்கப்பட்ட தவ்ராத்தின்மீது உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால் குர்ஆனின்மீதும் நம்பிக்கைகொண்டிருப்பார்கள். தூதரே! அவர்களிடம் நீர் கேளும், உங்களிடம் அல்லாஹ்வின் தூதர்கள் இதற்கு முன் கொண்டுவந்த சத்தியத்தை நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கைகொண்டிருந்தால் பிறகு ஏன் அவர்களை கொலைசெய்தீர்கள்?.