அல்-முக்தஸர்
وَلَقَدْ جَآءَكُم مُّوسَىٰ بِٱلْبَيِّنَـٰتِ ثُمَّ ٱتَّخَذْتُمُ ٱلْعِجْلَ مِنۢ بَعْدِهِۦ وَأَنتُمْ ظَـٰلِمُونَ ﴿٩٢﴾
உங்களிடம் வந்த தூதர் மூசா தான் உண்மையாளரே என நிரூபிக்கும் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவ்வாறிருந்தும் அவர் தனது இறைவனைச் சந்திப்பதற்காக சென்ற சமயத்தில் காளைக்கன்றை வணங்கக்கூடிய தெய்வமாக நீங்கள் ஆக்கிக் கொண்டீர்கள். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவற்றை ஆக்கி அநியாயக்காரர்களாகி விட்டீர்கள். அந்த அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்.