×
المؤمنونவசனம் 32

அல்-முக்தஸர்

فَأَرْسَلْنَا فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُۥٓ ۖ أَفَلَا تَتَّقُونَ ﴿٣٢﴾

அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்க நாம் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களிடம் அனுப்பினோம். அவர் அவர்களிடம் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். உங்களுக்கு உண்மையாக வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்ச மாட்டீர்களா?