×
المؤمنونவசனம் 33

அல்-முக்தஸர்

وَقَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِهِ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِلِقَآءِ ٱلْـَٔاخِرَةِ وَأَتْرَفْنَـٰهُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا مَا هَـٰذَآ إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ يَأْكُلُ مِمَّا تَأْكُلُونَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُونَ ﴿٣٣﴾

அவருடைய சமூகத்தில் அல்லாஹ்வை நிராகரித்த மறுமை நாளையும் அங்குள்ள நற்கூலியையும் தண்டனையையும் பொய்ப்பித்த, நாம் அவர்களுக்கு உலக வாழ்வில் வழங்கிய தாராளமான அருட்கொடைகளினால் வரம்பு மீறிய தலைவர்கள் தங்களைப் பின்பற்றிய பொதுமக்களிடம் கூறினார்கள்: “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான். நீங்கள் உண்ணுவதையே உண்ணுகிறார். நீங்கள் பருகுவதையே பருகுகிறார். உங்களின்பால் தூதராக அனுப்பப்படுவதற்கு உங்களை விட எந்த வகையிலும் அவர் சிறந்தவர் இல்லை.