×
النورவசனம் 21

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّبِعُوا۟ خُطُوَٰتِ ٱلشَّيْطَـٰنِ ۚ وَمَن يَتَّبِعْ خُطُوَٰتِ ٱلشَّيْطَـٰنِ فَإِنَّهُۥ يَأْمُرُ بِٱلْفَحْشَآءِ وَٱلْمُنكَرِ ۚ وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ مَا زَكَىٰ مِنكُم مِّنْ أَحَدٍ أَبَدًا وَلَـٰكِنَّ ٱللَّهَ يُزَكِّى مَن يَشَآءُ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ﴿٢١﴾

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! அசத்தியத்தை அலங்கரித்துக் காட்டும் ஷைத்தானின் வழிகளைப் பின்பற்றாதீர்கள். யார் ஷைத்தானின் வழிகளைப் பின்பற்றுவாரோ அவர்களை, அவன் மானக்கேடான சொல், செயல் மற்றும் மார்க்கம் தடுத்த செயல்களையே செய்யுமாறு ஏவுகிறான். -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ்வின் அருளும் கருணையும் உங்கள் மீது இல்லாதிருக்குமானால் உங்களில் எவரும் பாவமன்னிப்புக் கோரிக்கையின் மூலம் தூய்மையடைய முடியாது. ஆயினும் அல்லாஹ் தான் நாடியவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவர்களைத் தூய்மைப்படுத்துகிறான். அல்லாஹ் நீங்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன். உங்களின் செயல்களை நன்கறிந்தவன். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.