×
النورவசனம் 22

அல்-முக்தஸர்

وَلَا يَأْتَلِ أُو۟لُوا۟ ٱلْفَضْلِ مِنكُمْ وَٱلسَّعَةِ أَن يُؤْتُوٓا۟ أُو۟لِى ٱلْقُرْبَىٰ وَٱلْمَسَـٰكِينَ وَٱلْمُهَـٰجِرِينَ فِى سَبِيلِ ٱللَّهِ ۖ وَلْيَعْفُوا۟ وَلْيَصْفَحُوٓا۟ ۗ أَلَا تُحِبُّونَ أَن يَغْفِرَ ٱللَّهُ لَكُمْ ۗ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ ﴿٢٢﴾

மார்க்கத்தில் சிறப்பினைப் பெற்றவர்களும் செல்வம் படைத்தவர்களும் தேவையுடைய அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்த உறவினர்களுக்கு அவர்கள் செய்த பாவத்தின் காரணமாக கொடுக்காமல் இருப்பதற்கு சத்தியம் செய்ய வேண்டாம். அவர்கள் தங்களின் உறவினர்களை மன்னித்து அவர்கள் செய்த பாவங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடட்டும். நீங்கள் அவர்களை மன்னிப்பதனால் அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னிக்க வேண்டும், கண்டு கொள்ளாமல் விட வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். எனவே அவனது அடியார்களும் அவனைப் பின்பற்றி நடக்கட்டும். இந்த வசனம் அபூபக்ர் (ரலி) அவர்களின் விஷயத்தில் இறங்கியதாகும். மிஸ்தஹ் அவதூறு பரப்புவதில் பங்கெடுத்ததால் அவருக்கு இனி எதுவும் வழங்க மாட்டேன் என்று சத்தியம் செய்தார்.