அல்-முக்தஸர்
قُلْ أَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ ۖ فَإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُم مَّا حُمِّلْتُمْ ۖ وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا۟ ۚ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلْبَلَـٰغُ ٱلْمُبِينُ ﴿٥٤﴾
தூதரே!- இந்த நயவஞ்சகர்களிடம் நீர் கூறுவீராக: “வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். அவ்விருவருக்கும் கட்டுப்படுமாறு உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நீங்கள் புறக்கணித்துவிட்டால் அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக எடுத்துரைப்பதே தூதர் மீதுள்ள பொறுப்பாகும். அவருக்குக் கீழ்ப்படிந்து, அவர் கொண்டுவந்ததன் மீது செயல்படுவது உங்கள் மீதுள்ள பொறுப்பாகும். அவர் உங்களுக்குக் கட்டளையிட்டதைச் செயல்படுத்தி, அவர் தடுத்துள்ளதிலிருந்து விலகி நீங்கள் அவருக்குக் கீழ்ப்படிந்தால் நீங்கள் சத்தியத்தை அடைந்துவிடுவீர்கள். தெளிவாக எடுத்துரைப்பதே தூதர் மீதுள்ள கடமையாகும். உங்களைக் கட்டாயப்படுத்தி நேர்வழிக்கு சுமந்து கொண்டுவருவது அவருடைய கடமையல்ல.