×
النورவசனம் 55

அல்-முக்தஸர்

وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِى ٱلْأَرْضِ كَمَا ٱسْتَخْلَفَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ ٱلَّذِى ٱرْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّنۢ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا ۚ يَعْبُدُونَنِى لَا يُشْرِكُونَ بِى شَيْـًٔا ۚ وَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْفَـٰسِقُونَ ﴿٥٥﴾

உங்களில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிபவர்களுக்கு அவன் பின்வருமாறு வாக்களிக்கிறான்: “அவன் அவர்களின் எதிரிகளுக்கு எதிராக அவர்களுக்கு உதவிபுரிந்து அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த நம்பிக்கையாளர்களை பிரதிநிதிகளாக ஆக்கியது போன்று அவர்களையும் பூமியில் பிரதிநிதிகளாக ஆக்குவான். அவன் ஏற்றுக்கொண்ட அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தை மேலோங்கியதாகவும் நிலைபெற்றதாகவும் ஆக்குவான். அவர்களுக்கு ஏற்பட்ட அச்சத்திற்குப் பிறகு அவர்களை அமைதியானவர்களாக மாற்றுவான்.” அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு யாரையும் இணையாக்கமாட்டார்கள். இதன் பின்னரும் இந்த அருட்கொடைகளுக்கு யார் நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்வார்களோ அவர்கள்தாம் அல்லாஹ்வுக்கு அடிபணிவதை விட்டும் வெளியேறியவர்கள்.