×
النورவசனம் 58

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لِيَسْتَـْٔذِنكُمُ ٱلَّذِينَ مَلَكَتْ أَيْمَـٰنُكُمْ وَٱلَّذِينَ لَمْ يَبْلُغُوا۟ ٱلْحُلُمَ مِنكُمْ ثَلَـٰثَ مَرَّٰتٍ ۚ مِّن قَبْلِ صَلَوٰةِ ٱلْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُم مِّنَ ٱلظَّهِيرَةِ وَمِنۢ بَعْدِ صَلَوٰةِ ٱلْعِشَآءِ ۚ ثَلَـٰثُ عَوْرَٰتٍ لَّكُمْ ۚ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌۢ بَعْدَهُنَّ ۚ طَوَّٰفُونَ عَلَيْكُم بَعْضُكُمْ عَلَىٰ بَعْضٍ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلْـَٔايَـٰتِ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ﴿٥٨﴾

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களின் ஆண், பெண் அடிமைகளும், பருவமடையாத சுதந்திரமான சிறுவர்களும் உங்களிடம் வருவதற்கு மூன்று நேரங்களில் அனுமதி பெற வேண்டும். அவை: அதிகாலைத் தொழுகைக்கு முன்னர் நீங்கள் உங்கள் தூங்கும் ஆடைகளை கழற்றி எனைய நேரத்தில் அணியும் ஆடைகளை மாற்றும்போது, பகல் நேரத்தில் முற்பகல் தூக்கம் போடுவதற்காக நீங்கள் உங்கள் ஆடைகளைக் களையும் போது, இஷா தொழுகைக்குப் பிறகுள்ள நேரம். ஏனெனில் நிச்சயமாக அது உறங்கும் நேரம், எனைய நேர ஆடைகளை களைந்து உறங்கும் ஆடை அணிதல் போன்றவற்றுக்கான நேரமாகும். இந்த மூன்று நேரங்களும் உங்களுக்கு மறைவான நேரங்களாகும். உங்களின் அனுமதியின்றி யாரும் உங்களிடம் வரக்கூடாது. இந்த மூன்று நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் அனுமதியின்றி அவர்கள் உங்களிடம் வருவதில் உங்களுக்கும் அவர்களுக்கும் எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் எப்போதும் ஒருவரையொருவர் சுற்றிவருபவர்கள். எனவே எல்லா நேரங்களிலுமே அனுமதியின்றி நுழைய முடியாது என அவர்களைத் தடுப்பது சிரமமான ஒன்றாகும். அனுமதி கோருதல் பற்றிய சட்டங்களை அல்லாஹ் தெளிவுபடுத்தியவாறே மார்க்க சட்டங்களை அறிவிக்கக்கூடிய வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் தனது அடியார்களின் நலன்களை அறிந்தவனாவான். அவர்களுக்கு அவன் விதிக்கும் சட்டங்களில் அவன் ஞானமுள்ளவன்.