அல்-முக்தஸர்
وَإِذَا بَلَغَ ٱلْأَطْفَـٰلُ مِنكُمُ ٱلْحُلُمَ فَلْيَسْتَـْٔذِنُوا۟ كَمَا ٱسْتَـْٔذَنَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَـٰتِهِۦ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ﴿٥٩﴾
உங்கள் குழந்தைகள் பருவ வயதை அடைந்துவிட்டால் அவர்களும் வீடுகளில் நுழையும்போது முன்பு பெரியவர்களுக்கு கூறப்பட்டது போன்று எப்பொழுதும் அனுமதி கோர வேண்டும். அல்லாஹ் அனுமதி கோரும் சட்டங்களைத் தெளிவுபடுத்தியது போன்றே தன் வசனங்களையும் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அவன் தன் அடியார்களின் நலன்களை நன்கறிந்தவன். அவன் அவர்களுக்கு வழங்கும் சட்டங்களில் ஞானம் மிக்கவனாக இருக்கின்றான்.