அல்-முக்தஸர்
وَٱلْقَوَٰعِدُ مِنَ ٱلنِّسَآءِ ٱلَّـٰتِى لَا يَرْجُونَ نِكَاحًا فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ أَن يَضَعْنَ ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَرِّجَـٰتٍۭ بِزِينَةٍ ۖ وَأَن يَسْتَعْفِفْنَ خَيْرٌ لَّهُنَّ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ﴿٦٠﴾
திருமணத்தில் ஆர்வமில்லாத, கர்ப்பிணியாக முடியாத, மாதவிடாய் நின்றுவிட்ட மூதாட்டிகள் தங்களின் மறைக்குமாறு ஏவப்பட்ட மறைவான அலங்காரத்தை வெளிப்படுத்தாமல் மேலாடை முகத்திரை போன்ற சில ஆடைகளைக் களைந்து விடுவதில் எவ்விதக் குற்றமுமில்லை. இவ்வாறு சில ஆடைகளைக் களைவதைக்காட்டிலும் மறைப்பது, பக்குவத்திற்காக அவற்றை அணிந்துகொள்வதே அவர்களுக்குச் சிறந்ததாகும். நீங்கள் பேசுவதை அல்லாஹ் செவியேற்கக்கூடியவன்; உங்களின் செயல்களை அவன் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.