அல்-முக்தஸர்
إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَإِذَا كَانُوا۟ مَعَهُۥ عَلَىٰٓ أَمْرٍ جَامِعٍ لَّمْ يَذْهَبُوا۟ حَتَّىٰ يَسْتَـْٔذِنُوهُ ۚ إِنَّ ٱلَّذِينَ يَسْتَـْٔذِنُونَكَ أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ يُؤْمِنُونَ بِٱللَّهِ وَرَسُولِهِۦ ۚ فَإِذَا ٱسْتَـْٔذَنُوكَ لِبَعْضِ شَأْنِهِمْ فَأْذَن لِّمَن شِئْتَ مِنْهُمْ وَٱسْتَغْفِرْ لَهُمُ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ ﴿٦٢﴾
நிச்சயமாக அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்டவர்களே உண்மையான நம்பிக்கையாளர்களாவர். அவர்கள் தூதருடன் முஸ்லிம்களின் நலன் சம்பந்தப்பட்ட ஏதேனும் காரியத்தில் ஒன்று சேர்ந்து இருந்தால் அவரிடம் போகும் போது அனுமதி பெறாமல் திரும்ப மாட்டார்கள். -தூதரே!- உம்முடைய சபையிலிருந்து வெளியேறும் போது உம் அனுமதி பெற்று திரும்புபவர்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டவர்களாவர். அவர்கள் தங்களின் சில முக்கியமான விஷயத்திற்காக உம்மிடம் அனுமதி கோரினால் அவர்களில் நீர் நாடியோருக்கு அனுமதியளித்து விடுவீராக. அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.