அல்-முக்தஸர்
لَّا تَجْعَلُوا۟ دُعَآءَ ٱلرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُم بَعْضًا ۚ قَدْ يَعْلَمُ ٱللَّهُ ٱلَّذِينَ يَتَسَلَّلُونَ مِنكُمْ لِوَاذًا ۚ فَلْيَحْذَرِ ٱلَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِۦٓ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴿٦٣﴾
நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ்வின் தூதரைக் கண்ணியப்படுத்துங்கள். நீங்கள் அவரை அழைக்கும்போது உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப்போல முஹம்மதே அல்லது அப்துல்லாஹ்வின் மகனே, என்று பெயர்கூறி அழைக்காதீர்கள். மாறாக “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் நபியே!” என்று அழையுங்கள். அவர் ஏதேனும் பொதுக்காரியத்திற்காக உங்களை அழைத்தால் அவரின் அழைப்பை மற்றவர்களின் அழைப்பைப்போல் சாதாரணமாக எண்ணி விடாதீர்கள்.மாறாக உடனே அதற்குப் பதிலளியுங்கள். உங்களில் தூதரின் அனுமதியின்றி இரகசியமாகச் சென்றுவிடுவோரை அல்லாஹ் அறிவான். இறைத்தூதரின் கட்டளைக்கு மாறுசெய்பவர்கள், அல்லாஹ்விடமிருந்து தமக்கு ஏதேனும் சோதனை ஏற்படுவதை விட்டும் அல்லது அவர்களால் பொறுமை கொள்ள முடியாத வேதனைமிக்க தண்டனை ஏற்படுவதை விட்டும் எச்சரிக்கையாக இருக்கட்டும்.