×
النورவசனம் 64

அல்-முக்தஸர்

أَلَآ إِنَّ لِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ قَدْ يَعْلَمُ مَآ أَنتُمْ عَلَيْهِ وَيَوْمَ يُرْجَعُونَ إِلَيْهِ فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُوا۟ ۗ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۢ ﴿٦٤﴾

அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியவை. அவனே அவற்றைப் படைத்துள்ளான். அவற்றுக்கு உரிமையாளன். திட்டமிடுபவன். -மனிதர்களே!- உங்களின் நிலைகள் அனைத்தையும் அவன் நன்கறிவான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவர்கள் -மரணித்து பின்பு உயிர்பெற்று அவன் பக்கம் திரும்பும்- மறுமை நாளில் அவர்கள் உலகில் செய்த செயல்கள் அனைத்தையும் அவன் அவர்களுக்கு அறிவிப்பான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். வானங்களிலும் பூமியிலும் எப்பொருளும் அவனுக்கு மறைவாக இல்லை.