×
آل عمرانவசனம் 117

அல்-முக்தஸர்

مَثَلُ مَا يُنفِقُونَ فِى هَـٰذِهِ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا كَمَثَلِ رِيحٍ فِيهَا صِرٌّ أَصَابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ فَأَهْلَكَتْهُ ۚ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَـٰكِنْ أَنفُسَهُمْ يَظْلِمُونَ ﴿١١٧﴾

இந்த நிராகரிப்பாளர்கள் நன்மையான விஷயங்களில் செலவு செய்து அதன் பிரதிபலனை எதிர்பார்ப்பதற்கு உதாரணம் கடுங்குளிர் அடங்கிய காற்றைப் போன்றதாகும். அது பாவங்கள் செய்து தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களின் வயல்களில் வீசி அதனை நாசப்படுத்திவிட்டது. அவர்கள் அதிலிருந்து அதிகமான நன்மைகளை எதிர்பார்த்தார்கள். அவர்கள் பயன்பெறமுடியாதவாறு அந்தக் காற்று பயிர்களை அழித்துவிட்டது போன்றே நிராகரிப்பு அவர்கள் ஆதரவு வைத்திருக்கும் செயல்களின் கூலியையும் வீணாக்கிவிடும். அல்லாஹ் அவர்கள்மீது அநீதி இழைக்கவில்லை. அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்ததன் காரணமாக அவர்கள்தான் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.