×
آل عمرانவசனம் 118

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ بِطَانَةً مِّن دُونِكُمْ لَا يَأْلُونَكُمْ خَبَالًا وَدُّوا۟ مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ ٱلْبَغْضَآءُ مِنْ أَفْوَٰهِهِمْ وَمَا تُخْفِى صُدُورُهُمْ أَكْبَرُ ۚ قَدْ بَيَّنَّا لَكُمُ ٱلْـَٔايَـٰتِ ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ ﴿١١٨﴾

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நம்பிக்கையாளர்களை விடுத்து மற்றவர்களை உங்கள் இரகசியங்களையும் பிரத்யேக நிலமைகளையும் நீங்கள் தெரிவிக்கும் உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களுக்குத் தீங்குவிளைவிப்பதில் சோர்ந்துவிட மாட்டார்கள். உங்களுக்கு சிரமம்,தீங்கு ஏற்படுவதையே அவர்கள் விரும்புகிறார்கள். உங்கள்மீதான பகைமையும் வெறுப்பும் அவர்களின் நாவுகளில் வெளிப்பட்டுவிட்டது. அவர்கள் உங்கள் மார்க்கத்தைக் குறைகூறுகிறார்கள்; உங்களிடையே சண்டை மூட்டுகிறார்கள்; உங்களின் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் உள்ளங்களில் மறைத்துவைத்திருக்கும் வெறுப்போ மிகக் கடுமையானது. நம்பிக்கையாளர்களே! உங்கள் இரட்சகனிடத்திலிருந்து இறக்கப்பட்டதை நீங்கள் விளங்கிக் கொள்பவர்களாக இருந்தால் இவ்வுலக மறுவுலக நலவுகளுக்கான தெளிவான ஆதாரங்களை நாம் தெளிவுபடுத்திவிட்டோம்.