×
آل عمرانவசனம் 119

அல்-முக்தஸர்

هَـٰٓأَنتُمْ أُو۟لَآءِ تُحِبُّونَهُمْ وَلَا يُحِبُّونَكُمْ وَتُؤْمِنُونَ بِٱلْكِتَـٰبِ كُلِّهِۦ وَإِذَا لَقُوكُمْ قَالُوٓا۟ ءَامَنَّا وَإِذَا خَلَوْا۟ عَضُّوا۟ عَلَيْكُمُ ٱلْأَنَامِلَ مِنَ ٱلْغَيْظِ ۚ قُلْ مُوتُوا۟ بِغَيْظِكُمْ ۗ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴿١١٩﴾

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அந்தக் கூட்டத்தை விரும்புகிறீர்கள். அவர்களுக்கு நன்மையை நாடுகிறீர்கள். ஆனால் அவர்களோ உங்களை விரும்புவதில்லை; உங்களுக்கு நன்மையையும் நாடுவதில்லை. மாறாக உங்களை வெறுக்கிறார்கள். நீங்கள் அவர்களது வேதங்கள் உட்பட அனைத்து வேதங்களையும் நம்புகிறீர்கள். ஆனால் அவர்கள் உங்களின் தூதரான முஹம்மதுமீது அல்லாஹ் இறக்கியதை நம்ப மறுக்கிறார்கள். அவர்கள் உங்களை சந்தித்தால், ‘நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களில் சிலர் சிலருடன் தனித்துவிட்டால் உங்களின் ஒற்றுமையையும் இஸ்லாத்தின் கண்ணியத்தையும் அவர்களது இழிவையும் கண்டு கோபத்தாலும் கவலையாலும் தங்களின் விரல்களின் நுனிகளை கடித்துக் கொள்கிறார்கள். உள்ளங்களிலுள்ள ஈமானையும் நிராகரிப்பையும், நன்மையையும் தீமையையும் அல்லாஹ் நன்கறிந்தவன்.