அல்-முக்தஸர்
وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ ٱلْمُؤْمِنِينَ مَقَـٰعِدَ لِلْقِتَالِ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ﴿١٢١﴾
தூதரே! இணைவைப்பாளர்களுடன் போரிடுவதற்காக நீர் மதீனாவிலிருந்து உஹதை நோக்கி காலைப்பொழுதில் புறப்பட்ட சந்தர்ப்பத்தை நினைவுகூர்வீராக!. போரிடுவதற்காக நம்பிக்கையாளர்களை அவர்களுக்குரிய இடத்தில் நிறுத்தி ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய இடத்தை நீர் தெளிவுபடுத்தினீர். நீங்கள் பேசுவதை அல்லாஹ் செவியேற்பவன்; உங்களின் செயல்களை அவன் நன்கறிந்தவன்.