×
آل عمرانவசனம் 122

அல்-முக்தஸர்

إِذْ هَمَّت طَّآئِفَتَانِ مِنكُمْ أَن تَفْشَلَا وَٱللَّهُ وَلِيُّهُمَا ۗ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ ﴿١٢٢﴾

தூதரே! பின்வரும் சம்பவத்தை நினைவுபார்ப்பீராக: “பனூசலமா, பனூ ஹாரிசா என்ற இரு கூட்டத்தினரும் பலவீனமடைந்து நயவஞ்சகர்களோடு திரும்பிச் செல்ல நாடினார்கள். போர்புரிவதற்கு அவர்களை உறுதிப்படுத்தி, அவர்கள் நாடியதை விட்டும் திருப்பி அல்லாஹ்வே அவர்களுக்கு உதவிசெய்தான். நம்பிக்கையாளர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வின்மீதே நம்பிக்கைவைக்க வேண்டும்.”