அல்-முக்தஸர்
لَيْسَ لَكَ مِنَ ٱلْأَمْرِ شَىْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَـٰلِمُونَ ﴿١٢٨﴾
உஹதுப்போரில் இணைவைப்பாளர்களின் தலைவர்களினால் ஏற்பட்ட சம்பவங்களுக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவர்களை அழித்துவிடும்படி பிரார்த்தனை செய்தபோது அல்லாஹ் அவரிடம் கூறினான்: “உமக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் உங்களிடையே தீர்ப்பளிக்கும்வரை அல்லது அவர்களுக்குப் பாவமன்னிப்புக்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்வரை அல்லது அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்து அவன் அவர்களுக்குத் தண்டனையளிக்கும்வரை பொறுமையாக இருப்பீராக. நிச்சயமாக அவர்கள் தண்டனைக்குரிய அநியாயக்காரர்களாவர்.