×
آل عمرانவசனம் 129

அல்-முக்தஸர்

وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ يَغْفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ ﴿١٢٩﴾

வானங்களிலும் பூமியிலும் நிர்வகிக்கும் அதிகாரமும் படைக்கும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கே உரியது. தான் நாடிய அடியார்களின் பாவங்களை தன் கருணையால் அவன் மன்னித்துவிடுகிறான். தான் நாடியவர்களை தன் நீதியால் தண்டிக்கிறான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.