அல்-முக்தஸர்
وَلَا تَهِنُوا۟ وَلَا تَحْزَنُوا۟ وَأَنتُمُ ٱلْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ ﴿١٣٩﴾
நம்பிக்கையாளர்களே! உஹதுப்போரில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் பலவீனமடைந்து விடாதீர்கள், கவலைப்படாதீர்கள். அது உங்களுக்கு உகந்ததும் அல்ல. நீங்கள் அல்லாஹ்வின்மீதும் அவன் தன்னை அஞ்சும் அடியார்களுக்கு அளித்த வாக்குறுதியின்மீதும் நம்பிக்கைகொண்டவர்களாக இருந்தால் உங்களின் நம்பிக்கையினால், அல்லாஹ்வின் உதவியினால், அவனது உதவியில் கொண்டிருக்கும் ஆதரவினால் நீங்கள்தாம் உயர்ந்தவர்கள்.