×
آل عمرانவசனம் 140

அல்-முக்தஸர்

إِن يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ ٱلْقَوْمَ قَرْحٌ مِّثْلُهُۥ ۚ وَتِلْكَ ٱلْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ ٱلنَّاسِ وَلِيَعْلَمَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَآءَ ۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلظَّـٰلِمِينَ ﴿١٤٠﴾

நம்பிக்கையாளர்களே! உஹதுப்போரில் உங்களுக்கு உயிர்ச் சேதங்களும் காயங்களும் ஏற்பட்டிருந்தால் உங்களைப்போன்றே நிராகரிப்பாளர்களுக்கும் உயிர்ச் சேதங்களும் காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. நம்பிக்கைகொண்ட, நிராகரித்த மக்களிடையே உயர்ந்த நோக்கங்களுக்காக அல்லாஹ் தான் நாடியவாறு வெற்றியையும் தோல்வியையும் காலத்துக்குக் காலம் மாறிமாறி வரச் செய்கின்றான். உண்மையான நம்பிக்கையாளர்களை நயவஞ்சகர்களிடமிருந்து வேறுபடுத்துதல்; தான் விரும்பும் அடியார்களுக்கு தன் பாதையில் மரணிக்கச் செய்வதன் மூலம் கவுரவித்தல் ஆகியன அந்த நோக்கங்களில் சிலவாகும். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்வதை விட்டுவிட்டு தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.