அல்-முக்தஸர்
وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ ٱلرُّسُلُ ۚ أَفَإِي۟ن مَّاتَ أَوْ قُتِلَ ٱنقَلَبْتُمْ عَلَىٰٓ أَعْقَـٰبِكُمْ ۚ وَمَن يَنقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَن يَضُرَّ ٱللَّهَ شَيْـًٔا ۗ وَسَيَجْزِى ٱللَّهُ ٱلشَّـٰكِرِينَ ﴿١٤٤﴾
இறந்துவிட்ட அல்லது கொல்லப்பட்ட முந்தைய தூதர்களைப்போல முஹம்மதுவும் ஒரு தூதர்தாம். அவர் இறந்துவிட்டாலோ கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் ஜிஹாதை விட்டுவிட்டு உங்களின் மார்க்கத்தை விட்டு திரும்பி விடுவீர்களா என்ன? உங்களில் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டுத் திரும்பிவிடுபவர் அல்லாஹ்விக்கு எந்தத் தீங்கையும் இழைத்துவிட முடியாது. அவன் யாவற்றையும் மிகைத்தவன், வல்லமைமிக்கவன். மதம்மாறுபவர் இவ்வுலகிலும் மறுவுலகிலும் இழப்பிற்குள்ளாகி தனக்குத் தானே தீங்கைிழைத்துக்கொள்கிறார். தன் மார்க்கத்தில் உறுதியாக நிலைத்திருந்து, ஜிஹாது செய்து தனக்கு நன்றிசெலுத்தும் அடியார்களுக்கு அல்லாஹ் அழகிய கூலியை வழங்குவான்.