×
آل عمرانவசனம் 145

அல்-முக்தஸர்

وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ كِتَـٰبًا مُّؤَجَّلًا ۗ وَمَن يُرِدْ ثَوَابَ ٱلدُّنْيَا نُؤْتِهِۦ مِنْهَا وَمَن يُرِدْ ثَوَابَ ٱلْـَٔاخِرَةِ نُؤْتِهِۦ مِنْهَا ۚ وَسَنَجْزِى ٱلشَّـٰكِرِينَ ﴿١٤٥﴾

அல்லாஹ் எழுதிவைத்த தவணை நிறைவடையும் முன்னர் எந்த உயிரும் மரணிக்காது. அந்தத் தவணைக் காலம் கூடவோ குறையவோமாட்டாது. எவர் தம்முடைய செயல்களின்மூலம் இவ்வுலக நன்மையை விரும்புகிறாரோ நாம் அவருக்கு விதித்த அளவு வழங்குவோம். மறுமையில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை. எவர் தம்முடைய செயல்களின்மூலம் மறுமையை விரும்புவாரோ நாம் அவருக்கு அதற்குரிய கூலியை வழங்குவோம். தங்கள் இறைவனுக்கு நன்றிசெலுத்தும் அடியார்களுக்கு நாம் மிகப்பெரும் கூலியை வழங்கிடுவோம்.