அல்-முக்தஸர்
فَبِمَا رَحْمَةٍ مِّنَ ٱللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ ٱلْقَلْبِ لَٱنفَضُّوا۟ مِنْ حَوْلِكَ ۖ فَٱعْفُ عَنْهُمْ وَٱسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى ٱلْأَمْرِ ۖ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَوَكِّلِينَ ﴿١٥٩﴾
தூதரே! அல்லாஹ்வின் பெரும் அருளினால்தான் உம் தோழர்களுடன் மென்மையான முறையில் நடந்துகொள்கிறீர். சொல்லிலும் செயலிலும் நீர் கடுமையானவராக, கடினமனம் கொண்டவராக இருந்திருந்தால் உம்மை விட்டு அவர்கள் விலகிச் சென்றிருப்பார்கள். அவர்கள் உமக்குச் செய்த குறைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீராக. அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருவீராக. ஆலோசனை தேவைப்படும் விவகாரங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக. ஆலோசனைக்குப் பின் ஏதேனும் விஷயத்தில் நீர் உறுதிகொண்டுவிட்டால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவராக அதனைச் செயல்படுத்துவீராக. தன்மீது முழுமையாக நம்பிக்கை வைப்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான், அவர்களுக்கு வழிகாட்டுகிறான். அவர்களைப் பலப்படுத்துகிறான்.