அல்-முக்தஸர்
إِن يَنصُرْكُمُ ٱللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ ۖ وَإِن يَخْذُلْكُمْ فَمَن ذَا ٱلَّذِى يَنصُرُكُم مِّنۢ بَعْدِهِۦ ۗ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ ﴿١٦٠﴾
அல்லாஹ் தனது உதவியினால் உங்களைப் பலப்படுத்தினால் உலகிலுள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்தாலும் யாராலும் உங்களை மிகைக்க முடியாது. அவன் உங்களுக்கு உதவாது கைவிட்டுவிட்டால் அதற்குப் பிறகு யாராலும் உங்களுக்கு உதவிசெய்ய முடியாது. உதவி அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது. நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின்மீதே முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும். வேறுயாரையும் முழுமையாக நம்பியிருக்கக் கூடாது.