அல்-முக்தஸர்
وَمَآ أَصَـٰبَكُمْ يَوْمَ ٱلْتَقَى ٱلْجَمْعَانِ فَبِإِذْنِ ٱللَّهِ وَلِيَعْلَمَ ٱلْمُؤْمِنِينَ ﴿١٦٦﴾
உஹதுப்போரில் உங்களின் படைகளும் இணைவைப்பாளர்களின் படைகளும் மோதிக் கொண்டபோது நீங்கள் அடைந்த காயங்களும் உயிர்ச் சேதங்களும் தோல்வியும் அல்லாஹ்வின் அனுமதி, விதியின்படியே ஆழமான நோக்கங்களுக்காக நிகழ்ந்தவையாகும். அதன் மூலம் உண்மையான நம்பிக்கையாளர்கள் புலப்படுவார்கள்.