×
آل عمرانவசனம் 167

அல்-முக்தஸர்

وَلِيَعْلَمَ ٱلَّذِينَ نَافَقُوا۟ ۚ وَقِيلَ لَهُمْ تَعَالَوْا۟ قَـٰتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ أَوِ ٱدْفَعُوا۟ ۖ قَالُوا۟ لَوْ نَعْلَمُ قِتَالًا لَّٱتَّبَعْنَـٰكُمْ ۗ هُمْ لِلْكُفْرِ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنْهُمْ لِلْإِيمَـٰنِ ۚ يَقُولُونَ بِأَفْوَٰهِهِم مَّا لَيْسَ فِى قُلُوبِهِمْ ۗ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يَكْتُمُونَ ﴿١٦٧﴾

மேலும் நயவஞ்சகர்களும் இதன் மூலம் புலப்படுவார்கள். அவர்களிடம், “அல்லாஹ்வின் பாதையில் போர்புரியுங்கள் அல்லது முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஒத்துழையுங்கள்” என்று கூறப்பட்டால், “போர் நிகழும் என்பதை நாம் அறிந்திருந்தால் நாங்கள் உங்களைப் பின்பற்றியிருப்போம். ஆனால் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் போர்நிகழாது என்றே நாம் கருதுகிறோம்” என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் அப்போது நம்பிக்கையைவிட நிராகரிப்பிற்கே மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள். தங்கள் உள்ளங்களில் இல்லாதவற்றை தம் நாவுகளால் வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதை அல்லாஹ் நன்கறிவான். அதற்காக அவன் அவர்களைத் தண்டிப்பான்.