×
آل عمرانவசனம் 168

அல்-முக்தஸர்

ٱلَّذِينَ قَالُوا۟ لِإِخْوَٰنِهِمْ وَقَعَدُوا۟ لَوْ أَطَاعُونَا مَا قُتِلُوا۟ ۗ قُلْ فَٱدْرَءُوا۟ عَنْ أَنفُسِكُمُ ٱلْمَوْتَ إِن كُنتُمْ صَـٰدِقِينَ ﴿١٦٨﴾

அவர்கள்தான் போருக்குச் செல்லாமல் பின்தங்கியவர்கள், உஹதுப்போரில் மரணித்தவர்கள் குறித்து தங்கள் உறவினர்களிடம் கூறினார்கள்: “அவர்கள் நம் பேச்சைக் கேட்டு போருக்குச் செல்லாமல் இருந்திருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்.” தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டிருந்தால் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள், அல்லாஹ்வின் பாதையில் போருக்கு செல்லாமல் இருந்ததனால்தான் நாங்கள் மரணத்திலிருந்து தப்பி விட்டோம் என்று நீங்கள் கூறும் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் உங்களுக்கு மரணம் வரும்போது உங்களைக் காத்துக் கொள்ளுங்கள் பார்க்கலாம்.