அல்-முக்தஸர்
ٱلَّذِينَ قَالَ لَهُمُ ٱلنَّاسُ إِنَّ ٱلنَّاسَ قَدْ جَمَعُوا۟ لَكُمْ فَٱخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَـٰنًا وَقَالُوا۟ حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ ﴿١٧٣﴾
அவர்களிடம் சில இணைவைப்பாளர்கள், “போரிட்டு உங்களை அழித்தொழிப்பதற்கு குறைஷிகள் அபூசுஃப்யானின் தலைமையில் பெரும்படைகளைத் திரட்டியுள்ளார்கள். எனவே எச்சரிக்கையாக இருங்கள், அவர்களை அஞ்சிக் கொள்ளுங்கள்” எனக் கூறியபோது இணைவைப்பாளர்களின் இந்தப் பேச்சு நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின்மீதும் அவனுடைய வாக்குறுதியின்மீதும் கொண்ட நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்தியது. “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குப் பொறுப்பாளன். எங்களின் விவகாரங்களை அவனிடமே ஒப்படைக்கிறோம் என்று கூறியவர்களாக எதிரிகளைச் சந்திக்கப் புறப்பட்டார்கள்.