×
آل عمرانவசனம் 174

அல்-முக்தஸர்

فَٱنقَلَبُوا۟ بِنِعْمَةٍ مِّنَ ٱللَّهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوٓءٌ وَٱتَّبَعُوا۟ رِضْوَٰنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ ذُو فَضْلٍ عَظِيمٍ ﴿١٧٤﴾

அவர்கள் ஹம்ராவுல்அஸதிலிருந்து அல்லாஹ்விடம் பெற்ற பெரும் நன்மையோடும் உயர்ந்த அந்தஸ்துகளோடும் திரும்பினார்கள். காயமோ உயிர்ச்சேதமோ அவர்களுக்கு ஏற்படாது எதிரிகளிடமிருந்தும் பாதுகாப்பாக திரும்பினர். அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனுக்கு மாறுசெய்யாது அவனைத் திருப்திபடுத்தும் செயல்களைப் பின்பற்றினார்கள். அல்லாஹ்வை நம்பிக்கைகொண்ட தன் அடியார்கள்மீது பேரருள் புரியக்கூடியவன்.