×
آل عمرانவசனம் 179

அல்-முக்தஸர்

مَّا كَانَ ٱللَّهُ لِيَذَرَ ٱلْمُؤْمِنِينَ عَلَىٰ مَآ أَنتُمْ عَلَيْهِ حَتَّىٰ يَمِيزَ ٱلْخَبِيثَ مِنَ ٱلطَّيِّبِ ۗ وَمَا كَانَ ٱللَّهُ لِيُطْلِعَكُمْ عَلَى ٱلْغَيْبِ وَلَـٰكِنَّ ٱللَّهَ يَجْتَبِى مِن رُّسُلِهِۦ مَن يَشَآءُ ۖ فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦ ۚ وَإِن تُؤْمِنُوا۟ وَتَتَّقُوا۟ فَلَكُمْ أَجْرٌ عَظِيمٌ ﴿١٧٩﴾

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ், நயவஞ்சகர்களையும் உண்மையான நம்பிக்கையாளர்களையும் வேறுபடுத்தாமல் நீங்கள் இருக்கும் நிலையிலேயே அப்படியே உங்களை விட்டுவிடுவது அல்லாஹ்வின் ஞானத்திற்கு ஏற்புடையதல்ல. பொறுப்புகளையும் சோதனைகளையும் அளித்து உங்களில் நம்பிக்கையாளர்களையும் நயவஞ்சகர்களையும் அவன் வேறுபடுத்துவான். நம்பிக்கையாளர்களையும் நயவஞ்சகர்களையும் நீங்களே வேறுபடுத்திக்கொள்ளும் வகையில் உங்களுக்கு அவன் மறைவான விஷயங்களை அறிவிப்பதும் அவனது ஞானத்திற்கு ஏற்புடையதல்ல. ஆயினும் அல்லாஹ் தூதர்களில் தான் நாடியவர்களைத் தேர்ந்தெடுத்து அவருக்கு மறைவான விஷயங்களில் சிலவற்றை அறிவித்தும் கொடுக்கிறான். முஹம்மது நபிக்கு நயவஞ்சகர்களைக் குறித்து அறிவித்தது போன்று. எனவே அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் கொண்ட நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொண்டு, அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சினால் உங்களுக்கு அல்லாஹ்விடம் மகத்தான கூலி இருக்கின்றது.